paasam
Latest News
தமிழர் தாயக மாவீரர் துயிலும் இல்லங்களில் வெளிநாட்டவர்கள்!
கண்ணீரால் கரைந்தது விசுவடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்
மதுரையில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டம் தமிழீழ தேசியக்கொடியும் பறக்கவிடப்பட்டது

Advertisement

லண்டன் பிரிட்ஜ்ஜில் துப்பாக்கிச் சூடு : பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர்




லண்டன் பிரிட்ஜ்ஜில் சற்று முன்னர் கத்திக் குத்து தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நபர் ஒருவர் பொதுமக்களை கத்தியால் குத்தியதாகவும் அதன்பின்னர் அந்த நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் நம்பப்படுகிறது.

பிற்பகல் 1.58 க்கு லண்டன் பிரிட்ஜூக்கு அருகிலுள்ள வளாகத்தில் ஒருவர் கத்திகுத்துத் தாக்குதலில் ஈடுப்பட்டதாக தமக்கு அழைப்புக்கு கிடைத்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட லண்டன் பிரிட்ஜ் பகுதி தற்போது ஆயுதம் தாங்கிய பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

லண்டன் பிரிட்ஜ் நிலக்கீழ் ரயில் நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் எந்த ரயில்களும் அங்கு நிறுத்தப்படாது என்றும் பிரிட்டிஷ் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 


விளம்பரம்

paasam