Latest News
பிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்
கொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்
தமிழீழ எழுச்சிப்பாடல் பாடி அசத்திய சூப்பர் சிங்கர் சின்மயி!

Advertisement

details left ad2

'தேவர் மகன் 2' என்று ஏன் சொன்னேன்?- கமல் விளக்கம்




'தேவர் மகன் 2' படம் என்று ஏன் சொன்னேன் என கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் 'தேவர் மகன் 2' என்ற தனது பட அறிவிப்பை சமீபத்தில் தெரிவித்தார். அது சர்ச்சையை உருவாக்கியது. ஏற்கெனவே 'தேவர் மகன்' என்கிற படம் எடுத்ததில் கமல் மீது சர்ச்சை இருந்தது. இந்நிலையில் பகுத்தறிவு பேசும் கமல், சாதி இல்லை என பேசும் கமல் இப்படி ஒரு சமூகம் சார்ந்த பெயரில் படம் எடுக்கலாமா? என்று நெட்டிசன்கள் வலைதளங்களில் விமர்சித்தனர். இதற்கு தற்போது கமல்ஹாசன் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கமல் கூறியதாவது:

'தேவர் மகன்' படம் பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள்? அதே டைட்டில் திரும்ப வைப்பதன் அவசியம் என்ன?

டைட்டில் சொல்லவில்லை, ராஜ்கமலின் ஆறாவது படத்தை திரும்ப எடுப்பேன் என்று சொன்னால் புரியாது. ஆகையால் தான் ‘தேவர் மகன்’ என்று குறிப்பிட்டேன். அப்படத்துக்கு இன்னும் தலைப்பு இன்னும் முடிவு செய்யவில்லை. கண்டிப்பாக ‘தேவர் மகன்’ என்ற பெயர் இருக்காது.

சாதி ஒழிப்பு குறித்த விஷயங்களை தேவர் மகன் 2-வில் எதிர்ப்பார்க்கலாமா?

கண்டிப்பாக இருக்கும். எனக்கு சாதியில் விருப்பம் கிடையாது. நீங்கள் சாதிப்பெயரை ஏன் வைக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நீங்கள் மதுஒழிப்பைப் பற்றி படமெடுத்தால், அதில் கதாநாயகன் யாராக இருப்பார் என்று சொல்லுங்கள். மது ஒழிப்பைப் பற்றி எடுக்கும் போது, அப்படத்தின் மூலக்கரு குடிகாரனைப் பற்றிதான் இருக்கும். அதுதான் அதில் இருக்கும் விஷயம்.

சாதிக்கு எதிரான படமாக இருக்குமா?

எல்லா சாதிகளுக்குமான படமாக இருக்கும், நான் எடுக்கும் அனைத்துப் படங்களும் அனைத்து சாதியினருக்கும் எதிரான படம் தான்.

இவ்வாறு கமல்ஹாசன் பதிலளித்தார்



விளம்பரம்

details right ad1
paasam