Latest News
பிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்
கொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்
மத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து

Advertisement

details left ad2

போக்குவரத்துக் காவலர் பைக் சாவியை எடுத்ததால் ஆத்திரம்: மின்கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்




தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் போக்குவரத்துக் காவலர் பைக் சாவியை எடுத்ததால், இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோவில்பட்டியைச் சேர்ந்த ஜோதி ரமேஷ் என்பவர் தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கடைவீதிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், அவர் மது அருந்தி வாகனம் ஓட்டியதாகக் கூறி போக்குவரத்துக் காவலர் பைக் சாவியை எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த ஜோதி ரமேஷ், கோவில்பட்டி மாதாகோவில் தெரு சந்திப்பு வளைவில் உள்ள மின்கம்பத்தில் ஏறி, அருகே விளம்பரப் பதாகைகளுக்காக கட்டப்பட்டுள்ள கம்பின் மீது ஏறி கோஷமிட்டார்.

தகவலறிந்தவுடன் உதவி ஆய்வாளர்கள் ராமசாமி, வசந்தகுமார், போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் சுடலைமுத்து உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரைக் கீழே இறங்கி வருமாறு கூறினர்.

ஆனால், இறங்கி வர மறுத்த ஜோதி ரமேஷ் வாகனத்தின் சாவியை உடனடியாக கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், விளம்பரப் பதாகைகளுக்காக கட்டப்பட்டிருந்த கம்பு ஒன்றை எடுத்து மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்சார வயரைத் தாக்க முயன்றார். அதையடுத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் மின்தடை செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் ஜோதி ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 6.45 மணிக்கு ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதி ரமேஷ் சுமார் 7.45 மணிக்கு கீழே இறங்கி வந்தார்.

பிறகு ஜோதி ரமேஷின் பைக் சாவியைக் கொடுத்ததோடு, இதுபோன்று இனி அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று அவரை எச்சரித்து போலீஸார் அனுப்பி வைத்தனர்.



விளம்பரம்

details right ad1
paasam