Latest News
பிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்
கொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்
மத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து

Advertisement

details left ad2

முலாயம் குடும்பத்தில் முற்றுகிறதா அரசியல் குழப்பம்?




சமாஜ்வாடி கட்சியிலிருந்து வெளியேறி, மதச்சார்பற்ற சமாஜ்வாடி கட்சியைத் தொடங்கிய தனது தம்பி ஷிவ்பால் யாதவுடன் ஒரே மேடையில் தோன்றி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் முலாயம் சிங் யாதவ். “அநீதி என்பது எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. குடும்பம், கிராமம், நகரம் என்று எங்கு அநீதி நிகழ்ந்தாலும் எதிர்க்குரல் எழுப்புவது அவசியம்” என்றும் நிகழ்ச்சியில் அவர் பேசியது மகன் அகிலேஷ் மீது நடத்திய மறைமுகத் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது. முலாயம் இப்போதெல்லாம் அவ்வப்போது சமாஜ்வாடி கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைகாட்டுவதுடன், சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்ச்சியிலும் அகிலேஷுடன் கலந்துகொண்டிருந்தார். இத்தகைய சூழலில், “முலாயமின் சமீபத்திய பேச்சு மகனுக்கும் தம்பிக்கும் இடையில் அவர் சிக்கிக்கொண்டு தவிப்பதையே வெளிப்படுத்துகிறது” என்ற பேச்சை உண்டாக்கியிருக்கிறது. இதற்கிடையே, முலாயமின் இரண்டாவது மருமகள் அபர்ணா பிரதீக் அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சும் அடிபடத் தொடங்கியிருக்கிறது. முலாயமின் முதல் மனைவி மாலதி தேவிக்குப் பிறந்தவர் அகிலேஷ். இரண்டாவது மனைவி சாதனாவுக்குப் பிறந்தவர் பிரதீக். அரசியலிலிருந்து எப்போதுமே விலகியிருப்பவரான பிரதீக், தனது மனைவி அபர்ணா அரசியலுக்கு வருவதை விரும்புகிறார். பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசி, அவ்வப்போது முலாயமுக்கும் அகிலேஷுக்கும் அதிர்ச்சி கொடுப்பவர் அபர்ணா என்பது இங்கே கூடுதலாக இன்னொரு குழப்பம்!



விளம்பரம்

details right ad1
paasam