Latest News
பிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்
கொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்
மத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து

Advertisement

details left ad2

தண்ணீர் லாரிகள் திடீர் வேலை நிறுத்தம்: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்




சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

நிலத்தடி நீரை எடுக்க உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. நிலத்தடி நீரை கனிம வளப் பிரிவில் சேர்த்துள்ளதால் நிலத்தடி நீரைப்பெறுவதில் தண்ணீர் லாரிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிம வள பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இயக்கப்படும் 4, 500-க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் இயக்கபடவில்லை. இதனால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீருக்காக தண்ணீர் லாரிகளையே நம்பி இருக்கும் நிலை உள்ளது, இது தவிர குடியிருப்புகளில் வசிப்போர், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள்,வணிக வளாகங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட பலரும் தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்.

சென்னை குடிநீர் வாரிய நீர் நிரப்பு நிலையங்களிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில், தங்களது லாரிகள் மூலமாக அல்லது அங்கீகரிக்கப்பட்ட லாரிகள் மூலமாக குடிநீர் வழங்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் தண்ணீர் லாரிகள் ஸ்ட்ரைக் நீடித்தால் அது சிக்கலை உருவாக்கும் எனத் தெரிகிறது.



விளம்பரம்

details right ad1
paasam