Latest News
72 பந்துகளில் 104 ரன்கள்; பிறந்தநாளன்று அதிரடி சதம் அடித்து டெல்லி அணிக்கு அரையிறுதிக்கு வழிகாட்டிய கம்பீர்
முலாயம் குடும்பத்தில் முற்றுகிறதா அரசியல் குழப்பம்?
மத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து

Advertisement

details left ad1
details left ad2

மத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து




பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகாமல் இருந்தால்தான் ஆதாரங்களைத் திரட்ட முடியும் என ‘இந்து’ குழுமத் தலைவர் என்.ராம் தெரிவித்தார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு பெண் பத்திரிகையாளர்களின் மையம் ஆகியவை இணைந்து நடத்திய ‘பெண் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளும் சவால்களும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை சிந்தாதிரிபேட்டையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் ‘இந்து’ என்.ராம் பேசிய தாவது:

மீ டூ (நானும்தான்) ஹேஷ்டேக் பிரச்சார இயக்கம் பரபரப்பாக நடந்து வரும் இந்த நேரத்தில் பெண் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கருத்தரங் கம் நடப்பது மிகவும் முக்கியமானது மற்றும் பொருத்தமானது. மீ டூ இயக்கம் அமெரிக்கா முதல் இந்தியா வரை உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த இயக்கம் மூலம் மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகாமல் இருப்பதே நல்லது. அவர் பதவி விலகிவிட்டால் சில நாட்களில் அவரை நாம் மறந்து விடுவோம். பதவியில் நீடித்தால் மட்டுமே அவரைப் பற்றி இன்னும் பலமாக பேச முடியும். அவர் மீதான புகாருக்கு ஆதாரங்களைத் திரட்ட முடியும்.



விளம்பரம்

details right ad1
details right ad2
paasam