Latest News
72 பந்துகளில் 104 ரன்கள்; பிறந்தநாளன்று அதிரடி சதம் அடித்து டெல்லி அணிக்கு அரையிறுதிக்கு வழிகாட்டிய கம்பீர்
முலாயம் குடும்பத்தில் முற்றுகிறதா அரசியல் குழப்பம்?
மத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து

Advertisement

details left ad1
details left ad2

தகவல் புதிது: பின்டிரெஸ்ட்டுக்கு மாறலாமா?




நீங்கள் ‘பின்டிரெஸ்ட்’ சேவையைப் பயன்படுத்துபவரா? அப்படியெனில் நீங்கள் 25 கோடிப் பேரில் ஒருவர். மாதந்தோறும் 25 கோடிப் பேர் தங்கள் சேவையைப் பயன்படுத்துவதாக ‘பின்டிரெஸ்ட்’ தெரிவித்துள்ளது. மாறாக, பின்டிரெஸ்ட்டா? என்று வியப்புடன் கேட்பவராக நீங்கள் இருந்தால், இணையத்தின் ‘காட்சிப் பலகை’ என வர்ணிக்கப்படும் ‘பின்டிரெஸ்ட்’ சேவையுடன் அறிமுகம் செய்துகொள்ளுங்கள். இதுவும் ஃபேஸ்புக்போல சமூக வலைப்பின்னல் சேவைதான்.

ஆனால், இதில் நிலைத்தகவல்களோ கருத்துகளோ கிடையாது. எல்லாவற்றையும் காட்சி வடிவில் பலகையில் குத்தி வைக்கலாம். இந்தக் காட்சிப் பலகைகளை மற்றவர்களுக்கு பகிரலாம். முற்றிலும் காட்சிகளால் ஆன உலகம் இது. இணையத்தில் எதிர்மறை கருத்துகள் குவியும் சூழலில், நேர்மறையான பகிர்வின் இருப்பிடமாக  ‘பின்டிரெஸ்ட்’ விளங்குவதாக இந்தச் சேவை தெரிவித்துள்ளது. https://in.pinterest.com/



விளம்பரம்

details right ad1
details right ad2
paasam