Latest News
72 பந்துகளில் 104 ரன்கள்; பிறந்தநாளன்று அதிரடி சதம் அடித்து டெல்லி அணிக்கு அரையிறுதிக்கு வழிகாட்டிய கம்பீர்
முலாயம் குடும்பத்தில் முற்றுகிறதா அரசியல் குழப்பம்?
மத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து

Advertisement

details left ad1
details left ad2

நாட்டிலேயே முதல் முறை: தாயின் கருப்பையில் குழந்தை பெற்ற மகள்; கருப்பை மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய மைல்கல்




தாயின் கருப்பை மூலம் குழந்தை பெற்ற மீனாட்சி வாலன்   -  படம்: ஏஎன்ஐ

நாட்டிலேயே முதல் முறையாக, கருப்பை மாற்று அறுவை சிகிச்சையால் தாயின் கருப்பையின் மூலம் பெண் குழந்தை பெற்றுள்ளார் ஒரு பெண்.

உலக அளவில் இதுவரை கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் 12-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், இந்தியாவில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது இதுதான் முதல் முறையாகும்.

 

தான் பிறந்த தனது தாயின் கருப்பையிலேயே தனது குழந்தையையும் சுமந்து பெற்றெடுத்தது அந்தப் பெண்ணுக்கும், குழந்தைக்கும் கிடைத்த அரிதினிலும் அரிதான வாய்ப்பாகும்.

குஜராத் மாநிலம், வதோதரா நகரைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவரின் மகள் மீனாட்சி வாலன் (வயது27). இவருக்கு இரு முறை கரு உண்டாகி கலைந்துவிட்டது, ஒரு முறை குழந்தை பிறந்து இறந்துவிட்டதால், மீனாட்சி வாலனின் கருப்பை இனிமேல் கருவைச் சுமக்கும் தகுதியை இழந்துவிட்டது எனக்கூறி அதை அகற்றி மருத்துவர்கள் அகற்றிவிட்டனர்.

இதனால், தனக்கு இனிமேல் குழந்தை பிறக்கும் பாக்கியம் இல்லை என்று ஏங்கிய மீனாட்சி வாலனுக்கு, புனேயில் உள்ள கேலக்சி கேர் என்ற மருத்துவமனை கை கொடுத்தது. மீனாட்சி வாலனின் தாய் மீனாட்சியிடம் அவரின் கருப்பையை மகளுக்குக் கொடுக்க சம்மதம் கேட்டனர். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டதில், தாய் மீனாட்சியின் கருப்பை, மகளுக்குப் பொருந்தியது. இதனால், கடந்த 2017 ஆண்டு, மே 18-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் தாய் மீனாட்சியின் கருப்பை மகள் மீனாட்சி வாலனுக்குப் பொருத்தப்பட்டது. அதன்பின் 3 மாதங்கள் கண்காணிப்புக் காலத்தில் மீனாட்சி வாலன் வைக்கப்பட்டார்.

இந்த 3 மாதங்களுக்குப் பின் பின் உடல்நிலை தேறியவுடன் மீனாட்சி வாலன் வதோதராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மீனாட்சி வாலனுக்கு மாதவிடாய் சுழற்சி இயல்பு நிலைக்கு வந்தபின் அவரை மருத்துவமனைக்கு வரக்கூறி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். கடந்த மார்ச் மாதம் மீனாட்சி வாலனுக்கு மாதவிடாய் சுழற்சி சீரான நிலைக்கு வந்ததையடுத்து, புனே மருத்துவமனைக்கு மீனாட்சி வாலன் வந்தார்.

மீனாட்சி வாலன்

 

அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின்படி, டெஸ்ட் ட்யூப் மூலம் கரு உருவாக்கப்பட்டு, கருப்பையில் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு, ஏறக்குறைய 31 வாரங்கள் அதாவது 7 மாதங்கள் நிறைவடைந்தபின், குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்பின் நேற்று அறுவை சிகிச்சை மூலம் மீனாட்சி வாலன் வயிற்றில் இருந்து பெண் குழந்தை எடுக்கப்பட்டது. குழந்தை 2 கிலோ எடையில் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், இன்னும் 2 வாரங்கள் வரை கண்காணிப்பில் வைத்து தாயிடம் ஒப்படைக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தாயின் கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து மகளுக்குப் பொருத்தி 17 மாதங்கள் கழித்து கரு உண்டாகி, மகள் குழந்தை பெற்றெடுத்தது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும். மருத்துவ உலகில் இது மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து கேலக்ஸி மருத்துவமனையின் மருத்துவர் ஷைலேஷ் புதாம்பேக்கர் கூறுகையில், ''நாங்கள் புதிய வரலாறு படைத்திருக்கிறோம். நாட்டிலேயே கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை இதுதான். இது நாட்டுக்கே பெருமையாகும்.

இதுவரை ஸ்வீடனில் 9 குழந்தையும், அமெரிக்காவில் 2 குழந்தைகளும் என 11 குழந்தைகள் மட்டுமே கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது. நாட்டிலேயே மட்டுமல்ல, ஆசியாவிலேயே கருப்பை மாற்று மூலம் பிறந்த முதல்குழந்தை இதுதான்'' எனத் தெரிவித்தார்



விளம்பரம்

details right ad1
details right ad2
paasam