Latest News
தமிழர் தாயக மாவீரர் துயிலும் இல்லங்களில் வெளிநாட்டவர்கள்!
கண்ணீரால் கரைந்தது விசுவடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்
மதுரையில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டம் தமிழீழ தேசியக்கொடியும் பறக்கவிடப்பட்டது

Advertisement

விநாயகர் சதுர்த்தி விருந்து: வாழைப்பூ கொழுக்கட்டை




என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 1 கப்

கடலைப் பருப்பு – கால் கப்

உப்பு – தேவைக்கு

மிளகாய் வற்றல் – 3

கறிவேப்பிலை – ஒரு கொத்து

அரிசி மாவு – 1 கப்

எண்ணெய் – 4 டீஸ்பூன்

மோர் – கால் கப்

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு தண்ணீர் வடித்து உப்பு, மிளகாய் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அரிந்து வைத்துள்ள வாழைப்பூவை மோரில் போட்டு வையுங்கள். இப்படிச் செய்வதால் வாழைப்பூ நிறம் மாறாமல் இருக்கும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, விழுதாக அரைத்து வைத்துள்ள கடலைப் பருப்பைச் சேர்த்து உதிரியாக வரும்வரை நன்றாகக் கிளறிக்கொள்ளுங்கள். அதனுடன் வாழைப்பூவைச் சேர்த்துக் கிளறுங்கள்.

அரிசி மாவில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்துக் கொழுக்கட்டை பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள். பின்னர் உள்ளங்கையில் சிறிதளவு எண்ணெய் தேய்த்துக்கொண்டு அரிசி மாவை எடுத்துச் சிறு கிண்ணம் போலப் பிடித்து அதனுள் கடலைப் பருப்பு - வாழைப்பூ கலவையை வைத்து மூடிவிடுங்கள். இதுபோல் எல்லா மாவையும் கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

குறிப்பு: சீதா சம்பத்



விளம்பரம்