Latest News
72 பந்துகளில் 104 ரன்கள்; பிறந்தநாளன்று அதிரடி சதம் அடித்து டெல்லி அணிக்கு அரையிறுதிக்கு வழிகாட்டிய கம்பீர்
முலாயம் குடும்பத்தில் முற்றுகிறதா அரசியல் குழப்பம்?
மத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து

Advertisement

details left ad1
details left ad2

பணக்காரர்களுக்கு பிரத்யேக சேவை: பாரத் ஸ்டேட் வங்கி திட்டம்; 2020க்குள் 50 மையங்கள், 2 லட்சம் வாடிக்கையாளர்கள் இலக்கு




பாரத் ஸ்டேட் வங்கி அதிக சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களுக்கென பிரத்யேக வங்கி சேவையைத் தொடங்கியுள்ளது. 2020க்குள் இதற்காக 50 மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. 2 லட்சம் வாடிக்கையாளர்களை இணைக்க இலக்கு வைத்துள்ளது. 

பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி புதிய சந்தை வாய்ப்புகளைப் பிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக உள்ளது. இதற்காக தற்போது ‘வெல்த் ஹப்’ என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதிக சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களுக்கான பிரத்யேக சேவை என கூறப்பட்டுள்ளது. பாரத் ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் இந்த சேவையை அறிமுகப்படுத்தினார். 

அப்போது அவர் கூறுகையில், “பாரத் ஸ்டேட் வங்கியின் வெல்த் பிசினஸை எஸ்பிஐ வெல்த் என மாற்றியிருக்கிறோம். இதன் மூலம் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களுக்கான வங்கி மற்றும் முதலீட்டு சேவைகளை மேலும் சிறப்பாக வழங்கவிருக்கிறோம். இதற்காகவே பிரத்யேகமாக மேலாளர்கள் குழு அமைக்கப்படும்” என்றார்.

மேலும் 2020க்குள் நாடு முழுவதும் இதற்காக 50 மையங்கள் அமைக்கப்படும் என்றும், 2 லட்சம் வாடிக்கையாளர்களைக் கவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த சேவையின் கீழ் இரண்டு ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கும் என்றும் கூறினார். இந்தச் சேவையின் கீழ் தற்போது 35 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். பாரத் ஸ்டேட் வங்கியின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 42.5 கோடி.



விளம்பரம்

details right ad1
details right ad2
paasam