Latest News
72 பந்துகளில் 104 ரன்கள்; பிறந்தநாளன்று அதிரடி சதம் அடித்து டெல்லி அணிக்கு அரையிறுதிக்கு வழிகாட்டிய கம்பீர்
முலாயம் குடும்பத்தில் முற்றுகிறதா அரசியல் குழப்பம்?
மத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து

Advertisement

details left ad1
details left ad2

தோனி, கம்பீருக்கு வலை: 2019 பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறக்க பாஜக திட்டம்




கவுதம் கம்பீர், மகேந்திர சிங் தோனி : கோப்புப்படம்

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சி சார்பில் கிரிக்கெட் நட்சத்திர வீரர்கள் எம்.எஸ். தோனி, கவுதம் கம்பீர் ஆகியோரை வேட்பாளர்களாகக் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் ஒரு தொகுதியில் இருந்து கவுதம் கம்பீரும், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து எம்.எஸ். தோனியையும் களமிறக்க பாஜக பேச்சு நடத்தி அதற்கான வலையை வீசி இருப்பதாக தி சண்டே கார்டியன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

     

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின் இந்திய அணியில் கம்பீர் விளையாடவில்லை. ஆனால், சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கம்பீர் அதிகமாக ரன் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தைப் பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து இன்னும் ஓய்வை அறிவிக்காமல் விளையாடி வரும், கம்பீர், சமூக அக்கறை காரணமாக பல்வேறு உதவிகளைச் செய்தவர். பலமுறை அரசியலில் நுழைவது குறித்து பேசியுள்ள கம்பீர் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை.

 

ஒருவேளை டெல்லியில் போட்டியிட கம்பீருக்கு பாஜக வாய்ப்பு கொடுத்தால், அந்தக் கட்சியின் எம்.பி. மீனாட்சி லெகியிடம் இருந்து வாய்ப்பு பறிக்கப்படும். மீனாட்சி லெகியின் செயல்பாட்டில் எதிர்பார்த்த அளவுக்கு பாஜக தலைமைக்குத் திருப்தி இல்லாத காரணத்தால், டெல்லியில் கம்பீரைக் களமிறக்க பாஜக முயற்சி மேற்கொள்கிறது. மேலும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் போட்டி கொடுக்கும் நட்சத்திரப் பேச்சாளர் வேண்டும் என்பதால், கம்பீரை இழக்க பாஜக சார்பில் வலை வீசப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் தி சண்டே கார்டியன் நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், ''மீனாட்சி லெகியின் செயல்பாட்டில் கட்சியின் தலைமைக்கு திருப்தி இல்லை. அவரின் தொகுதியில் உள்ள மக்கள் மீனாட்சி மீது மிகுந்த அதிருப்தியில் இருப்பதால், மறுபடியும் அவருக்கு வாய்ப்பு வழங்குவது சந்தேகம், கிரிக்கெட் வீரர் கம்பீரை வேட்பாளராக அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அவரின் சமூக சேவையே காரணம். டெல்லி மக்களும் கம்பீர் மீது நல்ல மரியாதை வைத்துள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

 

மேலும், தோனியிடமும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சார்பில் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனியை சம்மதிக்க வைக்கத் தேவையான முயற்சிகளையும் பாஜக எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து அறிந்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ''கம்பீர், தோனி இருவரும் மக்கள் மத்தியில் நன்கு அறிந்த, ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். இருவரின் நம்பகத்தன்மை மக்களுக்குத் தெரியும், சமூகத்திலும் அனைத்துத் தரப்பு மக்களாலும் மதிக்கப்படக்கூடியவர்கள். அவர்கள் சார்ந்துள்ள மாநிலத்துக்கு மட்டும் இருவரும் தலைவர்கள் அல்ல, நாட்டுக்கே தலைவர்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இருக்கிறார். தென் மாநிலங்களில் தோனிக்கு மிகப்பெரிய மக்கள் கூட்டமும், ரசிகர்ளும் இருக்கிறார்கள். இருவரையும் கட்சிக்குள் கொண்டுவந்தால், அது கட்சிக்கு மிகப்பெரிய சொத்தாக அமையும்'' எனத் தெரிவித்தார்.



விளம்பரம்

details right ad1
details right ad2
paasam