Latest News
பிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்
கொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்
மத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து

Advertisement

details left ad2

தோனிக்கு 80 வயதானாலும் என் அணியில் அவர் ஆடுவார்: டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சிக்கு தோனி ரசிகர்கள் எழுச்சி




பேட்டிங் பார்மில் திணறி வரும், மந்தமாக ஆடிவரும் இந்தத் தோனியைக் கூட தான் 80வயது வரை தன் அணியில் வைத்திருப்பேன் என்று ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

தோனி ஓய்வு அறிவிக்கும் நேரம் வந்து விட்டது அல்லவா என்று டிவில்லியர்ஸிடம் கேட்டனர், அதற்குத்தான் அவர் 80வயதானாலும் என் அணியில் தோனி இருப்பார் என்று பதில் கூறியுள்ளார்.

 

தவறவிடாதீர்

விரட்டலில் இந்தியாவின் வெற்றிக் கூட்டணி; பாண்டிங் பாதையில் கோலி... எத்தனை வெற்றிக்கூட்டணியில் விராட் கோலி? - சில சுவாரஸ்யங்கள்

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்காக ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறியதாவது:

நீங்கள் வேடிக்கை செய்கிறீர்கள். தோனி என் அணியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டும் ஆடுவார். அவருக்கு 80 வயதாகியிருக்கலாம், சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கலாம், ஆனாலும் தோனி என் அணியில் இருப்பார்.

 

அவர் அபாரமான ஒரு வீரர், அவரது சாதனைகளை எடுத்துப் பாருங்கள். அவரைப்போன்ற ஒரு வீரரை அணியிலிருந்து நீக்க முடியுமா? என்ன ஆனாலும் அவர் அணியில் இருக்கத்தான் வேண்டும். நான் அவரை அணியிலிருந்து நீக்க மாட்டேன்.

இவ்வாறு கூறினார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.

இதனையடுத்து  ‘தோனி ட்ரெண்ட்ஸ்’ என்பதில் தோனி ரசிகர்கள் பெரும் எழுச்சிக் கொண்டாட்டம் போட்டு வருகின்றனர்.



விளம்பரம்

details right ad1
paasam