Latest News
72 பந்துகளில் 104 ரன்கள்; பிறந்தநாளன்று அதிரடி சதம் அடித்து டெல்லி அணிக்கு அரையிறுதிக்கு வழிகாட்டிய கம்பீர்
முலாயம் குடும்பத்தில் முற்றுகிறதா அரசியல் குழப்பம்?
மத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து

Advertisement

details left ad1
details left ad2

ரோஹித் சர்மாவை நின்று ஆடச் சொன்னேன்.. நான் அடித்து ஆட முடிவெடுத்தேன்: விராட் கோலி




படம். | கெட்டி இமேஜஸ்

மே.இ.தீவுகளின் 322 ரன்கள் இலக்கை அனாயாச எளிதுடன் விரட்டல் மன்னன் விராட் கோலி விரட்ட, ரோஹித் சர்மா 8 சிக்சர்களுடன் அதிரடியாக முடிக்க இந்திய அணி 43வது ஓவரில் 326/2 என்று மிகப்பெரிய அளவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:

தவறவிடாதீர்

விரட்டலில் இந்தியாவின் வெற்றிக் கூட்டணி; பாண்டிங் பாதையில் கோலி... எத்தனை வெற்றிக்கூட்டணியில் விராட் கோலி? - சில சுவாரஸ்யங்கள்

வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. திருப்திகரமான வெற்றி, வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கில் நன்றாக விளங்கினர். 320+ ரன் எண்ணிக்கை எப்போதுமே கொஞ்சம் ஜாக்கிரதையாக அணுகப்பட வேண்டியதாகும்.

ஒரு கூட்டணி போதும் என்று தெரியும். ரோஹித் சர்மா எதிர்முனையில் இருக்கும் போது விரட்டல் சுலபமாக இருப்பது வழக்கம்தான்.  நான் அடித்து ஆட ரோஹித் சர்மா உறுதுணையாக நின்று ஆடுவது அரிதாக நடப்பதாகும்.

டாப் 3 வீரர்களில் நான் நின்று ஆடி கடைசி வரை இட்டுச் செல்ல முடிவெடுப்பேன், ஆனால் இந்த ஆட்டத்தில் என்னவோ எனக்கு பேட்டிங் பற்றி ஒரு உற்சாகம் இருந்தது, அதனால் ரோஹித்திடம் ‘நீ உறுதுணையாக நின்று ஆடு’ என்று கூறிவிட்டு நான் அடித்து ஆடினேன்.

நான் ஆட்டமிழந்தவுடன் ரோஹித் சர்மா புகுந்து அடித்து ஆடினார், ராயுடு உறுதுணையாக ஆடினார். ரோஹித்துடன் ஆடுவதை எப்போதும் மகிழ்வானதாகக் கருதுகிறேன். இது எங்களது 5வது (6வது) இரட்டைச் சதக் கூட்டணியாகும்.

இந்த கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் ஆட இன்னும் சில ஆண்டுகள் என் கணக்கில் உள்ளன. நாட்டுக்காக ஆடுவது என்பது அரிதானது, அப்படியிருக்கும் போது எந்த ஒரு போட்டியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

பந்து வீச்சாளர்களை குறை கூற முடியாது, மே.இ.தீவுகள் பேட்டிங் அடித்து ஆடும்போது இந்தப் பிட்சில் கட்டுப்படுத்துவத் கடினம். பிட்ச் பேட்டிங் பிட்ச், நாம் 42 ஒவர்களில் விரட்டி வெற்றி பெற்று விட்டோம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.



விளம்பரம்

details right ad1
details right ad2
paasam