Latest News
பிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்
கொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்
மத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து

Advertisement

details left ad2

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.....!!




பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு(Brigadier Priyanka Fernando) எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்தும், கைது செய்ய வேண்டும் எனக்கோரியும் வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்தின் முன்றலில்(Westminster Magistrates' Court) இன்று(15/03/2019) பிரித்தானிய வாழ் தமிழர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

04/02/2018(இலங்கையின் 70ஆவது சுகந்திர நாள்/ஈழத்தமிழர்களின் கரிநாள்) அன்று அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரித்தானிய தமிழர்களை சைகை மூலம் கொ

லை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை பிரித்தானிய பொலீஸ் கைது செய்ய தவறியது. எனினும் International Centre for Prevention and Prosecution of Genocide(ICPPG) என்ற அமைப்பால் முன்னேடுக்கப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, அவரை கைது செய்ய பிடியாணையும் வழங்கியிருந்தது

ஆனால் இலங்கை அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, பிரித்தானிய வெளியுறவு அலுவலகம்(FCO) ஊடாக சட்டத்துக்கு முரணாக இந்த விடயத்தில் தலையீடு செய்யப்பட்டு இந்த பிடியாணை இரத்து செய்யப்பட்டுள்ளது. இது பிரித்தானிய நீதிதுறையின் நடுநிலைமையை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதை எதிர்த்து ICPPG மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது, அவ்வழக்கு இன்று நடைபெற்றது.



விளம்பரம்

details right ad1
paasam