paasam
Latest News
தமிழர் தாயக மாவீரர் துயிலும் இல்லங்களில் வெளிநாட்டவர்கள்!
கண்ணீரால் கரைந்தது விசுவடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்
மதுரையில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டம் தமிழீழ தேசியக்கொடியும் பறக்கவிடப்பட்டது

Advertisement

தடைகளை மீறி ஆரம்பமானது நினைவேந்தல்!!




 

யாழ்ப்பாணம் நல்லூரில் 25000 மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

நல்லூரில் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் சொந்த பெயர்களை வைத்து அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் இதற்குத் தடைகள் சில ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அந்தத் தடைகளைத் தாண்டியும் 2500 மாவீரர்களின் கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டு அஞ்சலிசெலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது பெருமளவானோர் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்கானஆயுதப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த 25,000 மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் நல்லூரிலுள்ள தியாக தீபம்தீலிபனின் நினைவுத் தூபிக்கு முன்னாள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலேயே நல்லூரில் திலீபனின் நினைவுதூபி முன்பாக தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் சொந்த பெயர்களைவைத்து அஞ்சலி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உள்ளூர் நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு குறித்த அஞ்சலிநிகழ்வை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் இன்றுமுற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்.பொலிஸார் மாவீரர்களின் பெயர்களை வைக்கமுடியாது என்று கூறி நிகழ்வை தடுக்க முற்பட்டுள்ளனர். எனினும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் உயிரிழந்த எமதுஉறவினர்கள் என்றும், அவர்களுடைய சொந்த பெயர்களையே அஞ்சலிக்காகவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர். எனினும் அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதித்த யாழ் பொலிஸார், நிகழ்வு ஏற்பாட்டாளர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிச் சென்றுள்ளனர். இருப்பினும் அஞ்சலிநிகழ்வு யார் தடுத்தாலும் நடாத்தப்படும் என்று ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தநிலையில் இன்று மாலை திட்டமிட்டபடி 25000 மாவீரர்களின் பெயர்கள்பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

 



விளம்பரம்

paasam