Paasam

பட்டரிகள் வெடிப்பதாக புகார்: ’Galaxy Note 7' போன்களை திரும்பப் பெறுகிறது சாம்சங்

பிரசுரிக்கப்பட்ட நாள் : 02 செப்டம்பர், 2016

அண்மையில் புதிதாக வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி 7 நோட் ஃபோன்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக விற்பனையாகி வந்தன. இந்நிலையில், ஃபோன்களை சார்ஜ் செய்யும் போது அதிக வெப்பமாகி பேட்டரிகள் வெடிப்பதாக பல்வேறு இடங்களில் புகார்கள் எழுந்தன. 


இது தொடர்பாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் சாம்சங் நிறுவனத்துக்கு எதிரான விமர்சனங்களைப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இந்த மாடல் ஃபோன்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த ஃபோன்களை திரும்பப் பெற சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 17ஆம் தேதி உலகம் முழுவதிலும் அறிமுகப்படுத்தப்பட்ட நோட் 7 மாடல் போன்கள் இந்தியாவில் இறக்குமதி காலதாமதம் காரணமாக இன்னும் விற்பனைக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மதிப்பில் நோட் 7 மாடல் போனின் விலை ஏறத்தாழ 60,000 ரூபாய் ஆகும்.