Paasam

எழுத்துக்கள், எண் ,சிறப்பு குறியீடு கொண்ட பாஸ்வேர்டுகள்

பிரசுரிக்கப்பட்ட நாள் : 28 டிசம்பர், 2016

தற்போது அனைவரும் ஸ்மார்ட்போன் மூலம் இணையதளத்தில் அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். அதே வேளையில் அதை நாம் எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்றைய டிஜிட்டல் உலகில் எல்லாமே இணையத்தளம் என்றாகிவிட்டது. இணையதளம் இல்லாமல் ஸ்மாட்ர்போன் கூட வெறும் பொம்மையாகி விடும்.

இந்நிலையில் நமது தகவல்களை எளிதாகத் திருடி விட முடியும். எனவே நமது பாஸ்வேர்டுகளை பதுகாப்பாக வைத்துக்கொண்டால் நமது தகவலும் பத்திரமாக இருக்கும். எல்லோரும் அவர்களது வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை பாதுகாக்க வேண்டியது மிக அவசியமானது. ஒவ்வொரு ஆன்லைன் சேவைகளுக்கும் தனித்தனி பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். 

உங்களின் பாஸ்வேர்டின் எண்ணி்க்கை பெரியதாக இருந்தால், அதனை ஹேக் செய்வது கடினமாகி விடும். பொதுவாக எழுத்துக்கள், எண் மற்றும் சிறப்பு குறியீடு உள்ளிட்டவற்றை கொண்ட பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது. அடிக்கடி உங்களின் பாஸ்வேர்டுகளை மாற்றுவது நல்லது. இவ்வாறு செய்யும்போது உங்களின் பாஸ்வேர்டினை ஹேக் செய்வது கடினம்.