Paasam

சோலார் மின்சக்தி உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய கூடம்

பிரசுரிக்கப்பட்ட நாள் : 28 டிசம்பர், 2016

உலகம் முழுவதும் சுற்றுபுறச் சூழல் மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றி தலைப்புச் செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், அதற்கு மாறான நல்ல ஒரு செய்தியும் வந்துள்ளது. தமிழ்நாட்டில், “கமுதி சோலார் திட்டம்” அண்மையில் முடிக்கப்பட்டதே அந்த நல்ல சேதியாகும். இது, தற்போது சோலார் மின்சக்தி உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய கூடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கமுதி சோலார் கூடம், சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில், அதாவது 476 கால்பந்து மைதானத்துக்கு சமமான இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. 648 மெகாவாட் தூய்மையான, பசுமை சக்தியை உற்பத்தி செய்து சுமார் ஒன்றரை லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கும் அளவிற்கு இதனால் முடியும். இதன் கட்டுமானப் பணியின் செலவு சுமார் 4,500 கோடி இந்திய ரூபாய் (679 டொலர் )என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த சோலார் கூடத்தில் கிட்டத்தட்ட 25 லட்சம் தனி சோலார் பானல்கள் (Solar Panels)உள்ளன. 

வை தினமும் ரோபோக்களின் உதவியுடன் சுத்தம் செய்யப்படுகின்றன. பின் அவை சூரிய ஒளியில் சார்ஜ் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன . சோலார் மின்சக்தி உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய கூடமாக. கமுதி சோலார் திட்டம், அதானி பவர் குழுமத்தால் கட்டப்பட்டுள்ளது. இதை முடிக்க அவர்கள் எட்டு மாதங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளனர். 

தற்போது இது உலகின் மிகப்பெரிய சோலார் நிலையமாக அறியப்படுகிறது. இதற்கு முன் கலிபோர்னியாவில் உள்ள டோபாஸ் சோலார் பார்ம், உலகின் பெரிய சோலார் மையமாக இடம் வகித்திருந்தது. இது 550 மெகாவாட் அளவிற்கு உற்பத்தி செய்துவந்ததாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டது. 2022இல் 60 மில்லியன் வீடுகளுக்கு சூரிய ஒளி சக்தி வழங்குவதே நோக்கம் என்று சொல்லப்படுகின்றது .