Paasam

22 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் புதிய நொக்கியா அறிமுகம்

பிரசுரிக்கப்பட்ட நாள் : 28 டிசம்பர், 2016

எச்.டி.எம் குளோபல் நிறுவனத்தின் புதிய நொக்கியா போன் அறிமுகமாகியுள்ளது. எச்.டி.எம் குளோபல் நிறுவனம் மீண்டும் நொக்கியா அலைபேசி விற்பனையைத் தொடங்கியுள்ளது. இநதப் புதிய அலைபேசி நொக்கியா150 என்ற பெயரில் வெளியாகியுள்ளது. 

இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இரண்டிலுமே 2ஜி ஜி.எஸ்.எம் சிம் கார்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும். 2.4 அங்குல திரை, சீரீஸ் 30 இயங்குதளம், 0.3 MP கேமரா, 1020mAh பேட்டரி ஆகியவை நோக்கியா 150 மொபைலில் இருக்கும். பேட்டரி 22 மணி நேரம் வரை நீடித்திருக்கும். கேமராவுடன் எல்.ஈ.டி. ஃப்ளாஷ் இருப்பது சிறப்பு அம்சமாகும். 

இது தவிர, எம்.பி.3 பிளேயர், ரேடியோ, ப்ளூடூத் ஆகியவையும் உண்டு. ஒரு வேரியண்டில் ஒரே ஒரு சிம் மட்டும் பயன்படுத்தும் படி உள்ளது. மற்றொன்றில் இரண்டு சிம்கார்டுகள் பயன்படுத்த முடியும். இதைத் தவிர மற்ற அனைத்து அம்சங்களும் பொதுவாகவே உள்ளன.