Paasam

மீண்டும் சந்தைக்கு வரவுள்ள நோகியா 3310

பிரசுரிக்கப்பட்ட நாள் : 15 பிப்ரவரி , 2017

நோகியா (Nokia) நிறுவனத்தினால் கடந்த 2,000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட Nokia – 3310 கையடக்க தொலைபேசி வகையை மீண்டும் சந்தைப்படுத்த அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கையடக்க தொலைபேசி வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய இந்த வகை தொலைபேசியின் பற்றரி (Battery) மற்றும் கடிமான பயன்பாட்டு தன்மை பலரினதும் கவனத்தை ஈர்த்தது.

59 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த வகை கையடக்க தொலைபேசியை இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் இடம்பெறவுள்ள Mobile World Congress இன் போது மீண்டும் சந்தைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.