Paasam

ரஜினிகாந்த் பற்றி சுப்பிரமணியன் சாமிக்கு என்ன தெரியும்? ராஜ்பகதூர் பரபரப்பு பேட்டி

பிரசுரிக்கப்பட்ட நாள் : 16 ஜூலை, 2017

ரஜினிகாந்த் பற்றி சுப்பிரமணியன் சாமிக்கு என்ன தெரியும் என்று ரஜினிகாந்த் நண்பர் ராஜ்பகதூர் கேள்வி எழுப்பி உள்ளார். பா.ஜ.க. எம்.பி. சுப்பிர மணியசுவாமி ஆழ்வார் திருநகரில் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வந்தார். 

விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆபத்து தான். தமிழக அரசியல்வாதிகள் தமிழகத்தில் புலியாக உள்ளனர். ஆனால் அவர்கள் டெல்லி சென்றால் பூனைக்குட்டிதான் என கூறியிருந்தார். 

இந்த நிலையில் நடிகர் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் செய்தியார்களிடம் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்த் பற்றி சுப்பிரமணியன் சாமிக்கு என்ன தெரியும்? அவர் எத்தனை முறை ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். *எந்தப் போர் என்பதை இன்னும் 2 மாதத்தில் ரஜினி அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.