Paasam

முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் காயம்

பிரசுரிக்கப்பட்ட நாள் : 15 ஆகஸ்ட், 2017

ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானது. அதில் இருவர் காயமடைந்தனர். இந்த விபத்து இன்று மாலை மூன்று மணியளவில் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. 

மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் நோக்கி சென்ற முச்சக்கரவண்டியே, நோர்வூட் – ரொக்குட் பகுதியில் குடைசாய்ந்து வித்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவருமே காயமடைந்துள்ளனர்.