Paasam

சாவகச்சேரி விபத்தில் முதியவர் காயம்

பிரசுரிக்கப்பட்ட நாள் : 16 ஆகஸ்ட், 2017

சாவகச்சேரி வடக்கு சோலையம்மன் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

அல்லாரை வடக்கைச் சேர்ந்த சுப்பரிரமணியம் இராசேந்திரம் (வயது-69) என்பவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சாலையில் வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற முதியவரை எதிரே வந்த வான் மோதியதில் அவர் காயமடைந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.