Paasam

கைதடியில் மயங்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு

பிரசுரிக்கப்பட்ட நாள் : 16 ஆகஸ்ட், 2017

சாவகச்சேரி – கைதடி கிழக்குப் பகுதியில் இன்று காலை வாந்தி எடுத்த குடும்பஸ்தர் மயங்கி வீழந்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. கைதடி கிழக்கைச் சேர்ந்த விஜயானந்தன் விஜயரூபன் (வயது-37) என்பவரே உயிரிழந்துள்ளார். 

இவ் உயிரிழப்புத் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர். அறிக்கையினைப் பார்வையிட்ட நீதிவான், பிரதேச திடீர் சாவு விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் மூலம் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.