Paasam

குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் யோஷித ராஜபக்ச

பிரசுரிக்கப்பட்ட நாள் : 16 ஆகஸ்ட், 2017

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச, குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் இன்று முன்னிலையாகியுள்ளார். ரக்பி வீரர் தாஜுதீன் படுகொலை தொடர்பிலேயே இன்றைய தினம் யோஷித ராஜபக்ச, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவரது தாயும் முன்னாள் அரச தலைவரின் பாரியாருமான ஷிரந்தி ராஜபக்ச, நேற்று குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியிருந்தார். அவரிடம் சுமார் 3 மணித்தியாலம் 30 நிமிடங்கள் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

கடந்த அரசின் போது செஞ்சிலுவை சங்கத்தால் சிரிலிய அமைப்புக்கு வழங்கப்பட்ட டிப்பெண்டர் ரக வாகனத்தின் நிறத்தை மாற்றி, யோஷித்த ராஜபக்சவின் உபயோகத்துக்கு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 

அத்துடன், முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வாரன ரோஹித ராஜபக்ச, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் நேற்று வாக்குமூலம் பதிவு செய்திருந்தார். கடந்த அரசின் காலத்தில் 320 மில்லியன் ரூபாய் செலவில் விண்ணுக்கு ஏவப்பட்டதாக கூறப்படும் சுப்ரீம் செட் வன் செய்மதி திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.