Paasam

துணை கேப்டன் பதவி என்பது மிகப் பெரிய கவுரவம்: ரோகித் ஷர்மா

பிரசுரிக்கப்பட்ட நாள் : 16 ஆகஸ்ட், 2017

இலங்கை அணியுடனான ஒரு நாள் போட்டி தொடரின் துணை கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமனம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரோகித் ஷர்மா கூறியதாவது: இந்திய அணியின் துணை கேப்டன் பதவி எனக்கு அளிக்கப்பட்டதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என மட்டுமே நினைத்தேன்.

ஆனால் துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டதை நினைத்து மிக மிக சந்தோஷமாக உணர்கிறேன். ஆகஸ்ட் 20 தேதி முதல் ஒரு நாள் போட்டி தொடங்க உள்ளது. இந்நிலையில், எனக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை நிச்சயம் பயன்படுத்திக் கொள்வேன். அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது ஆசை. இதனால், அந்த போட்டியை மட்டுமே நினைத்து கொண்டிருக்கப் போவதில்லை. 

இப்போதைக்கு எனது மகிழ்ச்சியான இந்த தருணத்தை அனுபவித்து வருகிறேன்.ஐ.பி.எல். மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டிகள் இரண்டும் வித்தியாசம் கொண்டவை. ஆனால், உணர்ச்சிகள் என்பது இரண்டு வகையான போட்டிகளிலும் ஒரே மாதிரியானது தான்” இவ்வாறு அவர் கூறினார்.