Paasam

கத்தார் நாட்டு புனித யாத்ரீகர்களுக்கு எல்லையைத் திறக்க சவூதி மன்னர் உத்தரவு

பிரசுரிக்கப்பட்ட நாள் : 17 ஆகஸ்ட், 2017

சவூதி உட்பட ஐந்து நாடுகள் கத்தாருடன் ராஜீய உறவுகளை துண்டித்துக் கொண்டப் பிறகு முதல் முறையாக சுமூகமான அடியொன்றை சவூதி முன்வைத்துள்ளது. கத்தாரிலிருந்து தூதர் ஒருவர் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்தப்பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சவூதி ஏர்லைன்ஸ்சின் தனியார் விமானங்கள் தோஹா விமான நிலையம் சென்று கத்தாரின் புனித யாத்ரீகர்களை அழைத்துவரும்படியும் மன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அழைத்து வரும் செலவு மன்னருடையது என்றும் கூறப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் உள்ள வரலாற்று உறவுகளை முன்வைத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இளவரசர் கூறியுள்ளார். 

கத்தார் அதிகாரிகள் சவூதி புனித யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் இருப்பதாக சென்ற மாதம் குற்றஞ்சாட்டினர். கத்தாரின் 2.6 மில்லியன் மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் அயல்நாட்டவர். தனிநபர் வருமானத்தின்படி உலகிலேயே பணக்கார நாடு கத்தார் என்று சர்வதேச செலாவணி நிதியம் கூறுகிறது. கத்தாரி 330 பில்லியன் அமெரிக்க டாலர்களை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதும் அதன் வளத்தை விளக்கும்.