Paasam

நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்களுக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன்

பிரசுரிக்கப்பட்ட நாள் : 17 ஆகஸ்ட், 2017

நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது இரு மகன்களும் பனமா கேட் மோசடி தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. பண மோசடி மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது இரு மகன்களுக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி என்.ஏ.பி எனப்படும் தேசிய பொறுப்பு முகமை நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது இரு மகன்களான ஹூசைன் மற்றும் ஹாசனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பனாமா கேட் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த சம்மன் அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 28 ஆம் தேதி பனாமா கேட் மோசடி தொடர்பாக நவாஸ் ஷெரீப்பின் பிரதமர் பதவியை பறித்த உச்ச நீதிமன்றம், என்.ஏ.பி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, லாகூர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆகஸ்ட்18 (நாளை) விசாரணைக்கு ஆஜராகுமாறு என்.ஏ.பி சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், என்.ஏ.பி சம்மனை ஏற்று நவாஸ் ஷெரீப் ஆஜராவது சந்தேகம் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.