Paasam

முதியவர் சடலமாக மீட்பு

பிரசுரிக்கப்பட்ட நாள் : 17 ஆகஸ்ட், 2017

தலவாக்கலை – தெவ்சிறி பகுதியில் ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 63 வயதுடைய முதிவர் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

குறித்த முதியவரின் வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.