Paasam

நீர் கொழும்பில் சரிந்தது கட்டடம் – சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சம்!

பிரசுரிக்கப்பட்ட நாள் : 17 ஆகஸ்ட், 2017

நீர்கொழும்பு பிரதேசத்தில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடத்தில் சிக்குண்டு மூவர் காயமடைந்துள்ளனர். நீர்கொழும்பு, பெரியமுல்லை பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த விருந்தினர் விடுதிக் கட்டடமே இடிந்துள்ளது. கட்டடத்தின் கொங்கிரீட் தளமொன்று உடைந்து விழுந்ததில் இந்த இடர் ஏற்பட்டுள்ளது. 

இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மற்றைய நபரை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.