Paasam

தவறான முடிவால் உயிரை மாய்க்க முயற்சித்தவர் காப்பற்றப்பட்டார்

பிரசுரிக்கப்பட்ட நாள் : 17 ஆகஸ்ட், 2017

வவுனியா – மன்னார் வீதி புகையிரதக் கடவைக்கு அண்மித்த புகையிரதத்தில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முன்ற குடும்பஸ்தர் ஒருவரை அப்பகுதியில் கடமையில் இருந்த புகையிரத கடவைக் காப்பாளர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா – மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்திற்கு அண்மித்து அமைந்துள்ள புகையிரதப் பாதையில் வயது முதிர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நீண்ட நேரமாக படுத்திருந்திருந்துள்ளார். 

இதனை அவதானித்த அயலில் வசிப்பவர்கள் அவரை அவ்விடத்தில் இருந்து அகற்ற முயற்சி செய்தபோது. தான் உயிரிழக்கப்பபோவதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா – மன்னார் வீதி புகையிரதக் கடவையில் கடமையில் இருந்த உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற உத்தியோகத்தர் அவரை அங்கிருந்து கட்டாயப்படுத்தி அகற்றி புகையிரதக் கடவை காப்பாளரின் அறைக்கு அழைத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

அங்கு நின்றவர்களால் வவுனியா பொலிஸ் நிலையம் மற்றும் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் குறித்த நபரை மீட்டதுடன், அவரை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.