Paasam

கொய்யாப்பழம் உண்ட சிறுமி உயிரிழப்பு

பிரசுரிக்கப்பட்ட நாள் : 17 ஆகஸ்ட், 2017

ஊவா பரணகம – அம்பகஸ்தோவ பிரதேசத்தில் கொய்யா பழத்தை உட்கொண்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 16 வயதுடைய சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளார். அவருடன் மேலும் மூன்று சிறுமிகள், கொய்யா பழங்களை உட்கொண்டுள்ள நிலையில், பின்னர் அவர்கள் ஊவா பரணகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் சிறுமியொருவர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏனைய சிறுமிகள் மூவரும், சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நான்கு சிறுமிகளும் நேற்று கொய்யா பழங்களை உண்டுள்ளனர்.

இதன் பின்னர் இவர்கள் நால்வரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இரசாயன திரவியம் ஏதாவது கொய்யா பழங்களில் சேர்க்கப்பட்டுள்ளதா என சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.