Paasam

யாழ் மண்டைதீவு கடலில் மூழ்கி ஆறு மாணவர்கள் பலி

பிரசுரிக்கப்பட்ட நாள் : 28 ஆகஸ்ட், 2017

பண்ணை, மண்டைதீவு கடற் பகுதியில் சற்றுமுன்னர் நடந்த படகு விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவரது உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மண்டை தீவுக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகில் சென்ற சமயமே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த படகு ஒன்றை எடுத்து கடலுக்குச் சென்றபோதே இந்த இடர் நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது.

இப்படியான "இளவயது" அவலச்சாவுகளை எங்கள் மண் கடந்த காலத்தில் அதிகமாகவே அனுபத்திருக்கிறது.

இப்போது போர் ஓய்ந்து கொஞ்சமாவது நிம்மதியாக இருக்கும் இந்தக்காலத்தில் வீதி விபத்துகளாலும் இப்படியான அவலச்சாவுகளாலும் மீண்டும் எங்கள் மண் துன்பத்தை அனுபவிப்பது சாபக்கேடு.

கடலில் குளிக்கச்செல்லும் போது கொஞ்சமாவது நீச்சல் தெரிந்திருக்கவேண்டும். அல்லது கண்டிப்பாக பாதுகாப்பு அங்கிகள் அணியவேண்டும்.

நீச்சல் தெரியாதவர்கள் கடலுக்குள் இறங்குவது தற்கொலைக்கு சமமானது.
நீந்தத்தெரியாதவர்களை பாதுகாப்பு அங்கிகள் இல்லாமல் கடலுக்குள் கூட்டிச்செல்வது கொலைசெய்வதற்கு சமமானது.

மரத்திலே ஏறுவதைப்போல நீச்சலும் ஒரு அடிப்படை வாழ்க்கைப்பயிற்சி.
இதை முடிந்தவரை கற்றுக்கொள்ளுங்கள்.
தன் உயிரை மட்டும் அல்ல பிறர் உயிரையும் காக்கமுடியும்.

இளவயது அவலச்சாவுகள் என்பது இறந்துபோனவர்களுக்கு ஒரு நிமிட வலி.ஆனால் அவர்களின் பெற்றோர்கள் , நண்பர்களுக்கு வாழ்க்கை முழுவதும் தீராத கொடும் வலி!!!!

எனவே அன்புச்சகோதரர்களே கவனமாய் இருங்கள்.