Paasam

லண்டனில் உபர் இயங்க அனுமதி ரத்து:போக்குவரத்து துறை அறிவிப்பு

பிரசுரிக்கப்பட்ட நாள் : 22 செப்டம்பர், 2017

பிரித்தானிய தலைநகரான லண்டனில் உபர் கால் டாக்ஸி மீண்டும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உபெர் கால் டாக்ஸி இயங்குவதற்கு கடந்த 2012-ம் ஆண்டு 5 ஆண்டுகள் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், TfL-ன் இந்நடவடிக்கை உள்ளூர் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 30-ம் திகதி உபர் டாக்ஸிக்கு வழங்கிய ஒப்பந்தம் காலம் நிறைவடைகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக லண்டன் போக்குவரத்து துறை சற்று முன்னர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், லண்டனில் மீண்டும் சேவையை தொடங்க தேவையான விதிமுறைகளை உபர் நிறுவனம் பின்பற்றவில்லை.

மேலும், பொதுமக்களின் நலனிற்காகவும், விதிகளை மீறிய காரணத்திற்காகவும் உபர் டாக்ஸி நிறுவனம் இனிமேல் லண்டனில் இயங்காது என TfL அதிரடியாக அறிவித்துள்ளது.