Paasam

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: 58 பேர் உயிரிழப்பு-515 பேர் படுகாயம்

பிரசுரிக்கப்பட்ட நாள் : 02 அக்டோபர், 2017

லாஸ் வேகாஸ் இசை நிகழ்ச்சியில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டத்தில் 50-கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உறுதி செய்துள்ளது.

குறித்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் 64 வயதான Stephen Paddock எனவும் அமெரிக்க வரலாற்றில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் ஒன்று எனவும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தில் 200-கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.